உலக மண்வள நாள் விழா


உலக மண்வள நாள் விழா
x

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள நாள் விழா நடந்தது

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக மண்வள கொண்டாடப்பட்டது. விழாவில் பூண்டி கே. கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், மண்வளம் பேணல் மற்றும் இயற்கை வேளாண்மையில் மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மேலும், வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளால் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களான, உலக மண் வள தினம் 2022 - மண் உணவு எங்கே கிடைக்கிறது மற்றும் உளுந்து பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை போன்றவற்றையும் வெளியிட்டார். பின்னர் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கினர். ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கா. சுப்பிரமணியன் பேசுகையில், மண் வள மேம்பாட்டில் கடைபிடிக்க வேண்டிய உத்திகள் உயிர் உரங்கள், தொழு உரம், பசுந்தாழ் மற்றும் பசுந்தழை உரங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விளக்கம் அளித்தார்.திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் ஹேமாஹெப்சிபாநிர்மலா வேளாண்மை துறையின் செயல்பாடுகள் பற்றி பேசினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் மண் வளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி உதவிப்பேராசிரியர் உழவியல் வெ. கருணாகரன் , மண்புழு உரம் தயாரித்தல் பற்றியும் மண்வளம் பேணல் பற்றியும் பேசினார்.முடிவில் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப வல்லுனர் மு.செல்வமுருகன் நன்றி கூறினார்.


Next Story