உலக புலிகள் தின விழா
உலக புலிகள் தின விழா
ஊட்டி
உலக புலிகள் தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வனவிலங்கு உயிரியல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வந்தவர்களை உதவி பேராசிரியர் ராஜேஸ்வரி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அருள் அந்தோணி தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கலந்து கொண்டு பேசினார். வனவிலங்கு உயிரியல்துறை பேராசிரியர் ராமகிருஷ்ணன் கூறும்போது, தற்போதைய நிலவரப்படி உலகில் உள்ள மொத்த புலிகள் எண்ணிக்கையில் 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் உள்ளன. அதனால்தான் புலிகளின் தாயகமாக இந்தியா விளங்கி விளங்குகிறது. புலிகளை பாதுகாப்பதால்தான் மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் அவை தின்று காலி செய்யக்கூடிய வனப்பரப்பும் பாதுகாக்கப்படுகிறது. இதனால் புலிகளை பாதுகாப்பது அவசியமாகிறது என்றார்.
தொடர்ந்து புலிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் நடந்தது. பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் உதவி பேராசிரியர் வித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.