உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்


உலக சுற்றுலா தினம் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டுவிழா, உலக சுற்றுலா தினம் மற்றும் தூய்மை விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வீரபாகு முன்னிலை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன் வரவேற்று பேசினார். பேராசிரியர் தர்மர் பேசினார். விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சுற்றுலாவும், பசுமை முதலீடுகளும் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கோட்டை வளாகத்தை சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிகளில் உதவி சுற்றுலா அலுவலர் நித்திய கல்யாணி, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story