உலக யோக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


உலக யோக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கரூர், குளித்தலையில் உலக யோக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கரூர்

யோகா தினம்

கரூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் யோகாவின் முக்கியத்துவம், உடல் நலத்தை பேணுதல், மன நலன் மற்றும் உடற்பயிற்சி பற்றி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம்

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கரூர் மாவட்ட நீதித்துறை மற்றும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தங்கினார். இதில் ஏனைய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை

குளித்தலை மற்றும் சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவ -மாணவிகள் நீண்ட வரிசையில் அமர்ந்து, குழுக்களாக நின்றும் பல்வேறு யோகாசனம் செய்து காட்டினார்.

இதேபோல பல்வேறு நிறுவனங்களிலும் ஊழியர்கள் யோகாசன பயிற்சி செய்தனர். குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் யோகாசன பயிற்சி செய்தனர்.

1 More update

Next Story