விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு; பாரதியார் பல்கலை. மாணவிகள் போராட்டம்


விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு; பாரதியார் பல்கலை. மாணவிகள் போராட்டம்
x

பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் விடுதியில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பல்கலைகழக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தில் மாணவிகள் தரமற்ற உணவு, குடீநீர் வழங்கப்படுகிறது என்றும் மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் பல்கலைக்கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story