பச்சரிசியில் புழு, வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு


பச்சரிசியில் புழு, வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு
x

பச்சரிசியில் புழு, வண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கீரமங்கலம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 26). இவர், சந்தைப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 5 கிலோ பச்சரிசி வாங்கியுள்ளார். பின்னர் அதனை வீட்டிற்கு கொண்டு வந்து பார்த்த போது, அதில் புழுக்களும், வண்டுகளும் இருந்துள்ளது. இதையடுத்து புழு, வண்டுகள் கிடந்த பச்சரிசியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story