நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது.
திருநெல்வேலி
இந்து மக்கள் கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நெல்லையப்பர் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. 8 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சியின் சாதனைகள் இன்னும் 80 ஆண்டுகள் தொடர நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் தங்க தேர் இழுத்து வழிபட்டனர். மேலும் பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தென் மண்டல தலைவர் ராஜா பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர்கள் கணேச பாண்டியன், காளிசாமி, ஒருங்கிணைப்பாளர் வடிவேல் முருகன், செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முருகன், பொருளாளர் முத்துப்பாண்டி, மகளிர் அணி தலைவி கலாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story