வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு
வேளுக்குடி பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வார வழிபாடு நடந்தது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடமாலை சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வேளுக்குடி வீர ஆஞ்சநேயர், பழையனூர் சஞ்சீவிராய ஆஞ்சநேயர், சாத்தனூர் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது.
Related Tags :
Next Story