ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில்தேர்த்திருவிழாவை முன்னிட்டு கம்ப மரத்திற்கு பூஜை


ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவில்தேர்த்திருவிழாவை முன்னிட்டு கம்ப மரத்திற்கு பூஜை
x
சேலம்

பனமரத்துப்பட்டி

ஆட்டையாம்பட்டியில் அமைந்துள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று பண்டிகை தொடங்கியது. இதையொட்டி கம்பம் நடுவதற்காக கம்ப மரத்திற்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக கம்பத்திற்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பலவிதமான வண்ண மலர் மாலைகளால் கம்ப மரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story