உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு


உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 19 Aug 2023 7:00 PM GMT (Updated: 19 Aug 2023 7:01 PM GMT)

நெல்லையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு நடந்தது.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு நீதித்துறை பணிகளில் உள்ள உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது.

நெல்லையில் உள்ள கிறிஸ்துராஜா, ஜான்ஸ், ரோஸ்மேரி, சாப்டர் பள்ளி உள்பட 5 பள்ளிகூடங்களில் தேர்வு நேற்று காலை நடந்தது. இந்த தேர்வுக்கு மொத்தம் 1,369 பேருக்கு அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. இதில் 1,251 பேர் தேர்வு எழுதினார்கள். 118 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இந்த தேர்வை மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் நீதிபதிகள் கண்காணித்தனர். தேர்வை முன்னிட்டு அனைத்து மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story