சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு இன்று எழுத்து தேர்வு: சேலத்தில் 10,695 பேர் எழுதுகிறார்கள்
இன்று நடைபெறும் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை சேலத்தில் 10,695 பேர் எழுதுகிறார்கள்
சேலம்
சேலம்,
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 444 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. தேர்வு எழுத சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 695 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 8 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்கு வரவேண்டும். 9.50 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், தேர்வு சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாலை தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்கள்.
Related Tags :
Next Story