போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு


போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,868 பேர் எழுதினார்கள்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை, ஆண், பெண் மற்றும் திருநங்கை) பணிக்கான எழுத்துத்தேர்வை அறிவித்தது. இத்தேர்வானது தமிழகம் முழுவதும் நேற்று 39 தேர்வு மையங்களில் தொடங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு 570 பெண்கள், 2,486 ஆண்கள் என மொத்தம் 3,056 பேர் விண்ணப்பித்திருந்தனர். எழுத்து தேர்வு நேற்று கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளியில் நடைபெற்றது.

இதில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுத் தேர்வும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணிவரை திறனறிவு தேர்வும் நடைபெற்றது. இதை சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. தினகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் ஆய்வுசெய்தனர். இத்தேர்வை 496 பெண்கள், 2,372 ஆண்கள் என மொத்தம் 2,868 பேர் எழுதினார்கள். 188 பேர் தேர்வு எழுத வரவில்லை. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய் கார்த்திக்ராஜா மற்றும் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story