போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
x

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி கல்லூரியில் 3 அறைகளில் நடந்தது. இந்த தேர்வை எழுத 1,677 ஆண்களும், 522 பெண்களும் என மொத்தம் 2,199 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் காலையில் நடந்த தேர்வை 1,398 ஆண்களும், 431 பெண்களும் என மொத்தம் 1,829 பேர் தேர்வு எழுதினர். 370 பேர் தேர்வு எழுத வரவில்லை. மதியம் நடந்்த தமிழ் தேர்வை 1,826 பேர் எழுதினர். இதில் காலையில் தேர்வு எழுதியவர்களில் 3 பேர் மதியம் நடந்த தேர்வை எழுத வரவில்லை.

இந்த தேர்வு மையத்தை சென்னை வேப்பேரி கூடுதல் கமிஷனர்(மத்திய குற்றப்பிரிவு) மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உடனிருந்தார். தேர்வு நடந்த மையத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக தேர்வு எழுந்த வந்தவர்களை சோதனை செய்த பின்னரே தேர்வறைக்கு செல்ல அனுமதித்தனர்.


Next Story