சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு

சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு
x

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வை 3,406 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 677 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வை 3,406 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 677 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழகம் முழுவதும் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்கு 800 பெண்கள் உள்பட 4 ஆயிரத்து 83 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக காரைக்குடியில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

விண்ணப்பித்தவர்களில் 677 பேர் நேற்று வரவில்லை. தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் காலையில் பொதுஅறிவுத் தேர்வும் மதியம் தமிழ் தகுதித் தேர்வும் நடைபெற்றது.

ஆய்வு

ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.(பொறுப்பு) பொன்னி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு எழுத வந்தவர்களுக்காக சிறப்பு பஸ் வசதி மற்றும் மதிய உணவு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story