37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு


37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு
x

37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நேற்று 6 மையங்களில் நடந்தது. இதில் அரியலூர் வட்டத்திற்கு கீழப்பழுவூர் அருகே கருப்பூர் விநாயகா கல்வியியல் நிறுவனத்திலும், செந்துறை வட்டத்திற்கு செந்துறை செயின்ட் தெரசா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியிலும், ஜெயங்கொண்டம் வட்டத்திற்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், மேலும் அதன் வளாகத்தில் உள்ள மீனாட்சி ராமசாமி பி.எட் கல்லூரியிலும், ஆண்டிமடம் வட்டத்திற்கு விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளியிலு ம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அரியலூர் வட்டத்தில் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்த 1,426 பேரில், 1,102 பேரும், ஜெயங்கொண்டம் வட்டத்தில் 1,441 பேரில், 1,037 பேரும், செந்துறை வட்டத்தில் 641 பேரில், 477 பேரும், ஆண்டிமடம் வட்டத்தில் 535 பேரில், 401 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 4,043 பேரில், 3,017 பேர் தேர்வு எழுதினர். 1,026 பேர் தேர்வு எழுத வரவில்லை.


Next Story