கோவையில் 5 மையங்களில் ராணுவப் பணிக்கு எழுத்து தேர்வு
கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
கோவை
கோவையில் ராணுவப் பணிக்காக எழுத்து தேர்வு 5 மையங்களில் நடந்தது.1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.
ராணுவ பணிக்கு தேர்வு
நாடு முழுவதும் மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த ராணுவத் தோ்வுகள் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 5 தோ்வு மையங்களில் நடந்தது.
இதனைக் கண்காணிக்க கலெக்டர் சமீரன் தலைமையில் துணை கலெக்டர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பாா்வையாளா்கள், தாசில்தார் நிலையில் உள்ள அதிகாரிகள் என ஒரு தோ்வு மைய ஆய்வு அலுவலா், துணை வட்டாட்சியா் நிலையில் தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் 9 போ், அறை கண்காணிப்பாளா்கள் 78 போ் ஆகியோா் நியமிக்கப்பட்டிருந்தனர்.
கலெக்டர் ஆய்வு
கலெக்டர் சமீரன் ஜி.டி. மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்தினார்.காலை மற்றும் மதியம் நடைபெற்ற இரண்டு தோ்வுகளுக்கும் தோ்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தோ்வு மையத்துக்குள் தோ்வா்கள் வந்தனர்.தோ்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன் வாயில் கதவு அடைக்கப்பட்டு அதன்பின் வரும் தோ்வா்கள் அனுமதிக்கப்படவில்லை. செல்போன் டிஜிட்டல் கைக்கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதிக்கப்படவில்லை.
1861 பேர்
மேலும் தோ்வா்கள் நுழைவுச் சீட்டுடன், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துவர அறிவுறுத்தப்பட்டிருந்தது அதனை ஆய்வு செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 1861 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். 51 சதவீதம் பேர் வந்திருந்தனர். 49 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.