காவலர்-தீயணைப்புத்துறையினருக்கு எழுத்து தேர்வு


காவலர்-தீயணைப்புத்துறையினருக்கு எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 27 Nov 2022 12:15 AM IST (Updated: 27 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், இன்று காவலர்-தீயணைப்புத்துறையினருக்கு எழுத்து தேர்வு நடக்கிறது

மயிலாடுதுறை


தமிழ்நாடு சீருடைப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை வார்டன், தீயணைப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டதையடுத்து முதன்முறையாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான எழுத்து தேர்வு மன்னம்பந்தலில் உள்ள ஏ.வி.சி. கலை கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 3 ஆயிரத்து 120 பேர் விண்ணப்பித்துள்ளனர். தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 9 இன்ஸ்பெக்டர்கள், 42 சப்-இன்ஸ்பெக்டர்கள், 310 காவலர்கள் மற்றும் 35 அமைச்சு பணியாளர்கள் என மொத்தம் 400 பேர் தேர்வு பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.


Next Story