போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 485 பேர் எழுதினர். 533 பேர் தேர்வை எழுத வரவில்லை.

சிவகங்கை

காரைக்குடி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 485 பேர் எழுதினர். 533 பேர் தேர்வை எழுத வரவில்லை.

எழுத்து தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 621 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் 33 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்காக தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருந்தனர். விண்ணப்பம் செய்ததில் பொதுப்பிரிவு மற்றும் காவல்துறையினருக்கு நேற்றும், இன்றும் இந்த தேர்வு நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்வு காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி, உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி, அழகப்பா அரசு பொறியியல் கல்லூரி ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்ட மையங்களில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த தேர்விற்கு மொத்தம் 3 ஆயிரத்து 18 பேர் விண்ணப்பத்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 485 பேர் மட்டும் நேற்று இந்த தேர்வை எழுதினர். இதில் 645 பேர் பெண்கள். 533 பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை.

நீண்ட வரிசை

முன்னதாக இந்த தேர்வை எழுத வருபவர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வர உத்தரவு விடப்பட்டதையடுத்து தேர்வு நடைபெற்ற 3 மையங்களில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களை போலீசார் பரிசோதனை செய்து ஹால்டிக்கெட்டுடன் தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தேர்வு நடைபெற்ற மையங்களை மதுரை சரக டி.ஐ.ஜி. தினகரன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், காடவின் ஜெகதீஷ் குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த தேர்வையொட்டி காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.


Related Tags :
Next Story