யாதவ மகாசபை மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்


யாதவ மகாசபை மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூரில் யாதவ மகாசபை மாநில மாநாடு ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் யாதவ திருமண மகாலில் தமிழ்நாடு யாதவ மகாசபை ஆலோசனைக்கூட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு யாதவ மகா சபை மாநிலத்தலைவர் ராமச்சந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 2-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாட்டினை முதுகுளத்தூர் யாதவ சங்க தலைவர் நாகலிங்கம், செயலாளர் இளங்கோவன், பொருளாளர் கருப்புசாமி உள்பட முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகா யாதவ சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்துள்ளனர்.


Related Tags :
Next Story