கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை


கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை
x

குடமுழுக்கு விழாவையொட்டி கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தியில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வானமுட்டி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை உள்ள இந்த கோவிலில் பல்வேறு சோழ மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட சிறப்புடையது ஆகும். இந்த கோவில் குடமுழுக்கு விழா வருகிற 9-ந்தேதி(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்து விட்டு திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார்.



Next Story