ரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார்


ரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார்
x

திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்கள் கொடுத்த நூலை வாங்கிக்கொண்டு துணி நெய்து கொடுக்காமல் ரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் பனியன் உற்பத்தியாளர்கள் கொடுத்த நூலை வாங்கிக்கொண்டு துணி நெய்து கொடுக்காமல் ரூ.2 கோடி மோசடி செய்ததாக நிட்டிங் நிறுவனத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி மோசடி புகார்

திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் நூலை கொள்முதல் செய்து அதை நிட்டிங் நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் அடிப்படையில் கொடுத்து துணியாக பெற்று ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து ஆடை உற்பத்தி நடக்கிறது.

இந்தநிலையில் திருப்பூர் செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு நிட்டிங் நிறுவனத்தில் 12 பனியன் உற்பத்தியாளர்கள் நூல் கொடுத்து துணி நெய்து கொடுக்க ஆர்டர் கொடுத்துள்ளனர். ஆனால் அந்த நிட்டிங் நிறுவன உரிமையாளர் துணியை நெய்து கொடுக்காமல், நூல்கள் அனைத்தையும் விற்று விட்டு தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. மொத்தம் ரூ.2 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

விழிப்புணர்வு அவசியம்

இந்தநிலையில் பாதிக்கப்பட்ட பனியன் உற்பத்தியாளர்கள் திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சிலிடம் தெரிவித்தனர். இதுகுறித்து கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறும்போது, 'ஆர்டர் கொடுத்து வரவு செலவு மேற்கொண்டு பணம் கொடுப்பதில் இழுபறி ஏற்பட்டால் அதை கவுன்சில் மூலமாக தீர்த்து வைக்கப்படும். ஆனால் நூலை பெற்றுக்கொண்டு துணியை நெய்து கொடுக்காமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிட்டிங் நிறுவனத்தின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு பனியன் உற்பத்தியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜாப்ஒர்க் நிறுவனங்களை தேர்வு செய்யும்போது நல்ல நிறுவனங்களை பனியன் உற்பத்தியாளர்கள் தேர்வு செய்து ஆர்டர் கொடுக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

----

Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur


Related Tags :
Next Story