யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்


யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தைமுதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
x

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதியவர் வழங்கினார்.

நாமக்கல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல் பாண்டியன் (வயது 72). பிச்சைக்காரரான இவர் கடந்த 1980-ம் ஆண்டு குடும்பத்துடன் மும்பையில் குடியேறினார். அங்கு துணிகளை 'அயர்ன்' செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது 3 குழந்தைகளையும் கரை சேர்த்த பூல் பாண்டியன், முழுநேர யாசகரானார்.

மேலும் தான் பிச்சை பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதி, இலங்கை தமிழருக்கு நிவாரண நிதி, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கொடுப்பது என பல்வேறு நிவாரண நிதிகளுக்கு கொடுத்து வருகிறார். சமீபகாலமாக முதல்-அமைச்சர் பொது நிவாரணத்துக்கு வங்கி மூலம் டி.டி. எடுத்து, எந்த மாவட்டத்தில் இருக்கிறாரோ? அந்த மாவட்ட கலெக்டர் மூலம் அனுப்பி வருகிறார்.

இந்தநிலையில் தான் யாசகம் பெற்றது மூலம் கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதற்காக நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார். இவர் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 21-ந் தேதி ரூ.10 ஆயிரம் வழங்க நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

1 More update

Next Story