கருமாரியம்மனுக்கு வருடாபிஷேகம்


கருமாரியம்மனுக்கு வருடாபிஷேகம்
x

உடையார்பாளையத்தில் உள்ள கருமாரியம்மனுக்கு வருடாபிஷேகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காமாட்சி அம்மன் தெருவில் உள்ள செல்வ கணபதி, பாலசுப்பிரமணியசுவாமி, கருமாரியம்மனுக்கு 3-ம் ஆண்டு வருடாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அனுக்ஞைவிக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், நவக்கிரக ஹோமம், கருமாரியம்மனுக்கு சிறப்பு யாகம், மஹா பூர்ணாஹூதி நடந்தது. இதையடுத்து, காலை 10 மணியளவில் கருமாரியம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு கருமாரியம்மன் வீதியுலா வந்தார்.


Next Story