ரூ.1.67 கோடிக்கு மஞ்சள் ஏலம்


ரூ.1.67 கோடிக்கு மஞ்சள் ஏலம்
x

திருச்செங்கோட்டில் ரூ.1.67 கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6,061 முதல் ரூ.7 ஆயிரத்து 489 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 471 முதல் ரூ.6 ஆயிரத்து 441 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 488 முதல் ரூ.11 ஆயிரத்து 469 வரையிலும் ஏலம் போனது. மொத்தம்4,500 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 67 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story