ரூ.2½ கோடிக்கு மஞ்சள் ஏலம்


ரூ.2½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
x

திருச்செங்கோட்டில் ரூ.2½ கோடிக்கு மஞ்சள் ஏலம் போனது.

நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி ரகம் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 919 முதல் ரூ.8 ஆயிரத்து 199 வரையிலும், கிழங்கு ரகம் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 452 முதல் ரூ.7 ஆயிரத்து 269 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 33 முதல் ரூ.12 ஆயிரத்து 689 வரையிலும் ஏலம் போனது. இந்த ஏலத்தில் 6,000 மஞ்சள் மூட்டைகள் தொத்தம் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story