அரூரில் ரூ.6½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்


அரூரில் ரூ.6½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்
x

அரூரில் ரூ.6½ லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் போனது.

தர்மபுரி

அரூர்:

அரூர் கச்சேரி மேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 125 மஞ்சள் மூட்டைகளை எடுத்து வந்தனர். விரலி ரக மஞ்சள் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ.5 ஆயிரத்து 779 முதல் 6 ஆயிரத்து 579 வரை ஏலம் போனது.

மேலும் குண்டு ரக கிழங்கு மஞ்சள் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 419 முதல் 6 ஆயிரத்து 69 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ.6½ லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது. இதேபோல் அங்கு நடந்த பருத்தி ஏலத்தில் ரூ.6½ லட்சத்துக்கு பருத்தி மூட்டைகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Next Story