திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
நாமக்கல்

திருச்செங்கோடு

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இதில் விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 200 முதல் ரூ.16 ஆயிரத்து 459 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.10,010 முதல் ரூ.15 ஆயிரத்து 509 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 152 முதல் ரூ.18 ஆயிரத்து 139 வரையிலும் விலை போனது. மொத்தம் 1,900 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 60 லட்சத்துக்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story