மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி
நாங்குநேரி சிங்கநேரியில் மஞ்சள் பை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் சிங்கநேரி ஊராட்சியில் "நம்ம ஊரு சூப்பரு" பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மஞ்சப்பை பேரணி நடைபெற்றது. பேரணியை சிங்கநேரி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வியாகப்பன், ஊராட்சி செயலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உன்னங்குளத்தில் நடந்த மஞ்சப்பை விழிப்புணர்வு முகாமை பஞ்சாயத்து தலைவர் புனிதா பெருமாள் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி துணைத்தலைவர் அந்தோணிராஜ், ஒன்றிய சுகாதார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலர் ஆ.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story