பொதுமக்களுக்கு மஞ்சள் பை

பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் அலுவலகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கும் நடைபெற்றது. இதில் கிராம உதயம் நிறுவன இயக்குனர் சுந்தரேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சுமார் 500 துணிப்பைகள் மற்றும் 500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், கிராம பகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





