நோய் தாக்குதலால் மகசூல் குறைவு


நோய் தாக்குதலால் மகசூல் குறைவு
x

நோய் தாக்குதலால் மகசூல் குறைவு

திருப்பூர்

நோய் தாக்குதலால் மகசூல் குறைவு

பல்லடம் தாலுகா கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி குமார் .இவர் வெங்காயம்.தக்காளி.மிளகாய்போன்ற பல்வேறு வகையான காய்கறி பயிர்களை சாகுபடி செய்துவருகிறார் .ஒரு ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு தற்பொழுது அறுவடை செய்யும் பணி நடந்து வருகிறது.

ஒராண்டு பயிரான மஞ்சள் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு விதை மஞ்சள் 900கிலோ முதல் 1000 கிலோ தேவைப்படுகிறது.ஒரு கிலோ மஞ்சள் 30 ரூபாய் வாங்கி நடவு செய்ய செய்தேன்.தற்பொழுது ஒரு சட்டை(100 கிலோ) 5000 முதல் 6000 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. நோய் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் விளைந்த மஞ்சள் அளவு சிறியதாக உள்ளது.இந்த நோய் தாக்குதலை கட்டுபடுத்த முடியவில்லை. நல்ல விளைச்சல் இருந்தால் ஒரு ஏக்கருக்கு 25 முதல் 35 சட்டைகள் வரை கிடைக்கும்.ஆனால் நோய் தாக்குதல் காரணமாக 15 முதல் 20 சட்டைகள் வரை மட்டுமே கிடைக்கும். விளைந்த மஞ்சள் எடுக்கும் கூலி.அதனை பாலீஷ் போடுதல் . பாலீஷ் போடுவதற்காக பயன்படுத்த விறகு வாங்குவதற்கான செலவு . இறுதியாக பாலீஷ் போட்ட மஞ்சளை ஈரோடு மஞ்சள் மண்டிக்கு கொண்டு செல்ல . உள்ளிட்ட ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே கூலி தர வேண்டும். இதற்கு ஒரு ஏக்கருக்கு 60000 வரை செலவு ஏற்படுகிறது.இதிலுள்ள வேலைப்பளூ பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் மஞ்சள் சாகுபடி செய்ய விரும்புவதில்லை. ஒரு சட்டை மஞ்சள் (100 கிலோ ) 11000 ரூபாய்க்கு குறையாமல் விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும்.மஞ்சள் பயிரிடுவதை வழக்கமாக் கொண்டுள்ளேன். நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து வருகிறது.இதனால் இனி மஞ்சள் பயிரிட வேண்டுமா என சிந்திக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோன் .என்று கூறினார்


Next Story