யோகா போட்டி
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் யோகா போட்டி நடந்தது.
திருநெல்வேலி
இட்டமொழி:
தெற்கு விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கடற்படைத்தளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் யோகா போட்டிகள் 2 நாட்கள் நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மதுரை மற்றும் அதைச்சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 87 மாணவர்கள் கலந்து கொண்டனர். யோகா பெடரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த வி.ராஜகோபால் மற்றும் 5 யோகா வல்லுனர்கள் மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து கே.வி.ஓ.சி.எப்.ஆவடி சென்னையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு மாணவர்களை தேர்வு செய்தனர். போட்டி நிறைவு விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் என்.ராகேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story