அருப்புக்கோட்டை கோர்ட்டில் யோகா தினம்


அருப்புக்கோட்டை கோர்ட்டில் யோகா தினம்
x

அருப்புக்கோட்டை கோர்ட்டில் யோகா தினம் நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை நீதிமன்ற சார்பு நீதிபதி ராமலிங்கம், மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நீதிபதி முத்துஇசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கரநாராயணன் யோகா பயிற்சி அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து யோகா பயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. யோகா பயிற்சியில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் ராஜேந்திரன், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story