கல்வி நிறுவனங்களில் யோகா தின விழா


கல்வி நிறுவனங்களில் யோகா தின விழா
x

கள்ளக்குறிச்சி அருகே ஸ்ரீலட்சுமி கல்வி நிறுவனம் மற்றும் பாரதி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஸ்ரீ லட்சுமி கல்வி நிறுவனம்

கள்ளக்குறிச்சி அருகே உள்ள பங்காரம் ஸ்ரீலட்சுமி கல்வி நிறுவனத்தின் சார்பில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. இதற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், பொருளாளர் சாந்தி, இயக்குனர் சரவணன், ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வியியல் கல்லூரி தமிழ் பேராசிரியர் பெரியசாமி வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட மணவளக்கலை அறிவு திருக்கோவில் சார்பாக வெங்கடசுப்பிரமணியன், திட்ட அலுவலர் அருள்நிதி, சுப்பையா, மணவளக்கலை பேராசிரியர் ராஜா, அறங்காவலர் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இதில் கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சிராஜ்தீன், கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா, மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.

பாரதி மகளிர் கல்லூரி

கள்ளக்குறிச்சி அருகே தச்சூரில் உள்ள பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினவிழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமி கந்தசாமி முன்னிலை வகித்தார். முதல்வர் சுபா வரவேற்றார். நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி யோகா சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கலந்து கொண்டு யோகாவின் பெருமை மற்றும் அதன் நன்மைகளை மாணவிகளுக்கு எடுத்துக்கூறி யோகா பயிற்சி அளித்தார். இதில் அனைத்து மாணவிகளும் கலந்து கொண்டனர்.


Next Story