மாணவிகள் யோகா நிகழ்ச்சி


மாணவிகள் யோகா நிகழ்ச்சி
x

எஸ்.தங்கப்பழம் மருத்துவ கல்லூரியில் மாணவிகள் யோகா நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் தேசிய மருத்துவர்கள் தின விழா நடைபெற்றது. எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதன்மை செயல் அதிகாரி டாக்டர் பாரதி, கல்லூரி முதல்வர் டாக்டர் வினுதா, துணை முதல்வர் டாக்டர் கவிதா மற்றும் அனைத்து பேராசிரியர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மருத்துவ துறையின் முக்கியத்துவம் குறித்தும், மருத்துவர்களின் கடமைகள் குறித்தும் மாணவ-மாணவிகள் உரையாற்றினார்கள். மேலும் விழாவையொட்டி யோகா நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

1 More update

Next Story