கிளிக்குடி அரசு பள்ளியில் யோகா பயிற்சி


கிளிக்குடி அரசு பள்ளியில் யோகா பயிற்சி
x

கிளிக்குடி அரசு பள்ளியில் யோகா பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்முருகன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்கள் கட்டாயம் யோகா கற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் யோகா கற்றுக்கொள்வது அவசியம். யோகா கற்றுக்கொள்வதின் மூலம் மாணவர்களின் மனதும், உடலும் மேம்படும். மாணவர்கள் சுறுசுறுப்புடனும், மகிழ்ச்சியோடு வாழ, தினமும் காலை நேரத்தில் யோகா பயிற்சி செய்வது அவசியம். பள்ளி மாணவர்கள் யோகா கற்றுக்கொள்வதால் மன அமைதி கிடைப்பதோடு, உடலுக்கும், புத்துணர்ச்சி கிடைக்கும் என்றார். பள்ளி வளாகத்தில் நடந்த யோகா பயிற்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


Next Story