யோகாசன பயிற்சி வகுப்பு
முனைஞ்சிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் யோகாசன பயிற்சி வகுப்பு நடந்தது.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கோடைகால சிறப்பு யோகாசன பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அரசு சித்த மருத்துவர் வரதராஜன் மேற்பார்வையில் யோகா பயிற்றுனர் மகாராஜன் பயிற்சிகளை வழங்கினார். மேலும் கோடைகாலத்திற்கேற்ற சித்த மருத்துவ வாழ்வியல் முறைகள் விளக்கிக்கூறப்பட்டது. முதியவர்கள் சிறுவர்கள் பகல் நேரங்களில் வெயிலில் செல்வதை தவிர்க்கும் படியும் வெயிலின் தாக்கத்தை குறைக்க அடிக்கடி தண்ணீர் அருந்தவும், இளநீர், பதநீர், கரும்புச்சாறு, பழச்சாறு, பானகம், கேப்பைக்கூழ், கம்பங்கூழ், நீர்மோர் போன்ற திரவ உணவுகளை அதிகம் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டது. ஏராளமான சிறுவர்-சிறுமியர் ஆர்வமுடன் கலந்து கொண்டு திருமூலர் யோகாசன பயிற்சிகளை செய்தனர். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.