யோகா பயிற்சி வகுப்பு


யோகா பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 10:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தூத்துக்குடி

9-வது சர்வதேச யோகா தினம் வருகிற 21-ந் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாக அலுவலக கூட்டரங்கில் யோகா பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வாழும் கலை அமைப்பை சேர்ந்த யோகா பயிற்சியாளர் சங்கர் கலந்துகொண்டு செயல்விளக்கம் செய்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய துணை தலைவர் பிமல் குமார் ஜா மற்றும் அனைத்து துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story