அரக்கோணத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி


அரக்கோணத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி
x

அரக்கோணத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

அரக்கோணத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

அரக்கோணம் காவல் கோட்ட போலீஸ் நிலைய போலீசாருக்கான யோகா பயிற்சி அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் அரக்கோணம் தூய அந்திரேய ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதியின் உத்தரவின் பேரில் போலீசாருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யோகா பயிற்சியால் போலீசாருக்கு மன அழுத்தம் குறையவும், உடல் வலிமை பெறவும், தூக்கமின்மை போக்கி ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ளவும் பயனுடையதாக அமையும், எனவே, இந்த பயிற்சியின் மூலம் யோகா பயிற்சி பெறும் காவல்துறையில் பணிபுரியும் போலீசார் புத்துணர்வு பெறுவர்' என்றார்.

யோகா பயிற்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story