மாணவர்களுக்கு யோகா பயிற்சி


மாணவர்களுக்கு யோகா பயிற்சி
x
தினத்தந்தி 27 Jun 2023 1:30 AM IST (Updated: 27 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

மேபீல்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி


கூடலூர்


சர்வதேச யோகா தினத்தையொட்டி தேவர்சோலை அருகே மேபீல்டு அரசு பள்ளியில் சிறப்பு யோகா பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. சென்னையில் இருந்து வந்த குழுவினர் மேபீல்டு பள்ளியில் படிக்கும் 200 மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி 2 நாட்கள் நடைபெறுகிறது. முகாமுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பால்விக்டர் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் ஸ்ரீலேகா, பாலாஜி, பிரவீணா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் ஆசிரியர்கள் பாபு, குமார், ஜெசிகா, கற்பகவல்லி, பிரோஸ், ஸ்ரீநிவாஸ் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


1 More update

Next Story