பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா சீருடை


பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா சீருடை
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா சீருடை வழங்கப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சினேகம் அறக்கட்டளை சார்பாக, வாசுதேவநல்லூர் மகாத்மா காந்தி சேவா சங்கத்தின் மூலம் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு யோகா சீருடை, சென்சோரி மேட், யோகா மேட், கரும்பலகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் கு.தவமணி, தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன், சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, முத்துலட்சுமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story