தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடக்கக்கல்வி பட்டய படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ப.மணி மற்றும் ராணிப்பேட்டை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உமா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ராணிப்பேட்டையில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2023 -24-ம் கல்வி ஆண்டில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் மாணவர் சேர்க்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சேர்வதற்கு மேல்நிலைப்பள்ளி தேர்வில் பொது பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அட்டவணைப் படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய படிப்பில் (2 ஆண்டுகள்) சேர விரும்பும் மாணவ - மாணவிகள் ராணிப்பேட்டை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது www.https://scert.tnschools.gov.in எனும் இணையதள முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story