தொடக்க கல்வி பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


தொடக்க கல்வி பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

தொடக்க கல்வி பட்டயப்படிப்பு பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

2022-23-ம் கல்வியாண்டில் தொடக்க கல்வி பட்டயப்படிப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான தகுதிகளுடன் https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 9-ந்தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவை ேசர்ந்த விண்ணப்பதாரர்கள் மேல்நிலைக்கல்வி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைக்கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்று 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 31.7.2022 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கலப்பின தம்பதியரில் பொது, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 31.7.2022 அன்று 32 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 31.7.2022 அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர் 31.7.2022 அன்று 37 வயதிற்கு மிகாமலும், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்கள் 31.7.2022 அன்று 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பாடாலூரில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் வேப்பூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் 9994219899, 9442668040, 9894253498 என்ற செல்போன் எண்களிலோ, ஆலத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் 9994219899, 9842290560, 6381226784, 8870046983 என்ற செல்போன் எண்களிலோ, வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் 9994219899, 9942782753 என்ற செல்போன் எண்களிலோ, வேப்பூர் வட்டாரத்திற்கு உட்பட்டவர்கள் 9487428854, 9943508918 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மயில்வாகனன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story