அக்னிபாத் திட்டத்தில் விமான படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- 17-ந் தேதி கடைசி நாள்


அக்னிபாத் திட்டத்தில் விமான படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- 17-ந் தேதி கடைசி நாள்
x

அக்னிபாத் திட்டத்தில் விமான படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 17-ந் தேதி கடைசி நாளாகும்.

மதுரை


அக்னிபாத் திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் சேருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கு கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதிக்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பதவிகளின் தேர்வுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு விண்ணப்பிக்க வருகிற 17-ந் தேதி கடைசி நாளாகும். எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்திய விமானப் படையில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் சரியான நபர்களை தேர்வு செய்வதற்கான பணிகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த பணியில் சேருவதற்காக தனிநபர், இடைத்தரகர் என எவரிடமும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். மேற்கண்ட தகவல்களை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.


Next Story