சேலம் மாவட்டத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் கார்மேகம் தகவல்


சேலம் மாவட்டத்தில்  தீபாவளிக்கு பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்  கலெக்டர் கார்மேகம் தகவல்
x

சேலம் மாவட்டத்தில் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு கடைகள்

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களை தவிர்த்து புறநகர் பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து இ-சேவை அல்லது பொது சேவை மையங்களில் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டிட அமைவிட வரைபடம், கட்டிட உரிமை ஆவணங்கள், உரிம கட்டணமாக செலுத்தப்பட்ட ரசீது (சலான் அசல்), விண்ணப்பதாரரின் முகவரி குறித்த ஆவணம் (ஆதார் அட்டை, பான் அட்டை, குடும்ப அட்டை), வீட்டு வரி ரசீது, விண்ணப்பதாரரின் 2 புகைப்படங்கள் இணைக்க வேண்டும்.

பாதுகாப்பான இடம்

வருகிற 30-ந் தேதி வரை இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதன்பிறகு விண்ணப்பிக்க இயலாது. எனவே தற்காலிக பட்டாசு கடை அமைக்க உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பொது மக்களுக்கு சிரமமில்லாத, ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story