தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்


தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
x

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 2023-ம் ஆண்டிற்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியாளர்கள் சேர்க்கை இணையதளம் வாயிலாக முதற்கட்டமாக நடத்தப்பட உள்ளது. தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வுக்கான நிகழ்ச்சி நிரல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாளை கடைசி நாள்

இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கு நாளை (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். விண்ணப்பத்தின் போது முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப தேர்வு செய்ய தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை தேர்வு பட்டியல் வருகிற 14-ந்தேதி வெளியிடப்படும். 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையினை உறுதி செய்து சம்பந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மின்னஞ்சல் முகவரி gitiperambalur@gmail.com (செல்போன் எண்கள் 9499055881, 9499055882), அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் மின்னஞ்சல் முகவரி gitialathur@gmail.com (செல்போன் எண் 9499055881), மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மின்னஞ்சல் முகவரி dstoperambalur@gmail.com (செல்போன் எண் 9488451405), அரசு தொழிற்பயிற்சி நிலையம் குன்னம் மின்னஞ்சல் முகவரி gitikunnam@gmail.com (செல்போன் எண் 9047949366) ஆகிய சேர்க்கை உதவி மைய மின்னஞ்சல் முகவரி மூலமும், செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story