உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு


உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x

உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை எம்ஆர்பி நேற்று வெளியிட்டது. இதன்படி, அரசு மருத்துவமனைகளில் 1,021 உதவி மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதில்,அனைத்து சமூகப் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 74 இடங்கள், எஸ்.டி. பிரிவினருக்கு 4 இடங்கள் ஒதுக்கப்படுள்ளன.

உதவி மருத்துவப் பணியிடங்களுக்கு www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கணினிவழி எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

எஸ்.சி. எஸ்.சி.ஏ. எஸ்.டி. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1,000 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு, ஊதியம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story