கள்ளக்குறிச்சியில் வேலை வாய்ப்பு முகாம்:முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் :இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை


கள்ளக்குறிச்சியில் வேலை வாய்ப்பு முகாம்:முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் :இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை
x
தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று இளைஞர்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி


முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து வேலை வாய்ப்பு முகாமை கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ.கே.டி.மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் நடத்தினர்.

முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 152 முன்னனி தனியார்த்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, நேர்காணல் மூலம் பணியாளர்களை தேர்வு செய்தனர். அந்த வகையில் 16 மாற்றுத்திறனாளிகள்,4,520 பெண்கள் என்று மொத்தம் 10 ஆயிரத்து 132 பேர் கலந்து கொண்டனர்.

இவர்களில் 338 பெண்கள், 9 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,021 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 64 பேர் திறன் பயிற்சிக்கு பதிவு செய்யப்பட்டனர்.

பணிநியமன ஆணை

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கி பேசினார்கள்.

சிப்காட் தொழிற்சாலை

அப்போது, அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது:-

படித்த அனைத்து இளைஞர்களுக்கும் அரசு வேலை வழங்க இயலாது என்பதனால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் தனியார் துறை வேலைலாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் முதலில் ராணிப்பேட்டையில் கருணாநிதி சிப்காட் தொழிற்சாலையை கொண்டு வந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு இடங்களில் சிப்காட் வந்துள்ளது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு உளுந்தூர்பேட்டையில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க உத்தரவிட்டு, அதன் பணி நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

அரசுக்கு நிதிச்சுமை இருந்தாலும் தொழில்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை அமைக்க, வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டார்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்து வருகிறார்.

கள்ளக்குறிச்சியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 158 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பணி நியமன ஆணை பெற்று வேலைக்கு செல்லும் இளைஞர்கள் முயற்சிகளை இலக்காக வைத்து உழைத்திடுங்கள். ஏனெனில் உழைப்பவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு வேலை

அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள படித்த அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுத்திய திட்டம் தான் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்.

இத்திட்டத்தின்கீழ் சுமார் 140-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 40 வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற 41-வது தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை நடைபெற்ற 141 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் சுமார் 1,63,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை உறுதி


Next Story