"ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள்" - அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை,
சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆவின் நிறுவனத்தினை மேம்படுத்துவதற்கு தடையாக உள்ள சவால்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story