திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது


திருவல்லிக்கேணியில் கஞ்சா விற்ற இளம்பெண் கைது
x

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலையில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி ஆஸ்பத்திரியில் இளம்பெண் ஒருவர் கஞ்சா விற்பதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த வைஷ்ணவி (வயது 21) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.3 கிலோ கஞ்சா, ரூ.1 லட்சத்து 3 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 29-ந்தேதி முதல் 4-ந்தேதி வரையில் போலீசார் நடத்திய கஞ்சா, போதைப்பொருட்கள் ஒழிப்பு சோதனை வேட்டையில் 5 பெண்கள் உள்பட 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 39.3 கிலோ கஞ்சா, 500 கிராம் மெத்தம் பெட்டமைன், 950 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 9 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 23 ஆயிரம், 6 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

1 More update

Next Story