தஞ்சை நகைக்கடையில் திருடிய இளம்பெண் கைது

தஞ்சை நகைக்கடையில் மோதிரம் வாங்குவது போல் நடித்து திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை நகைக்கடையில் மோதிரம் வாங்குவது போல் நடித்து திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
நகைக்கடை
தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராவ் (வயது 64). இவருக்கு சொந்தமான நகைக்கடை தஞ்சையில் உள்ள சக்கநாயக்கன் வீதி காசுகடை தெருவில் அமைந்துள்ளது. இவர் நேற்று முன்தினம் தனது கடையில் இருந்தார். அப்போது அவரது கடையில் நகை வாங்குவது போல் ஒரு இளம்பெண் வந்தார்.
பின்னர் அவர் அக்கடையில் உள்ள நகைகளின் விலை நிலவரங்களை கேட்டறிந்து அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். நகை எதுவும் வாங்கவில்லை. இதனையடுத்து அந்தக்கடையில் இருந்தவர்கள் நகைகளை சரிபார்த்த போது அதில் 1 பவுன் மோதிரங்களை காணவில்லை. இது தொடர்பாக அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது கடைக்கு வந்த இளம்பெண் நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இளம்பெண் கைது
இதனை கண்காணித்த அந்த கடையில் இருந்தவர்கள் வெளியே நடந்து சென்ற அந்த இளம்பெண்னை மடக்கி தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தஞ்சை வங்கி ஊழியர் காலனி பகுதியை சேர்ந்த முத்துநதியா(28) என்பதும், அவர் தங்க மோதிரங்களை திருடியதும் தெரியவந்தது.
இது குறித்து கோவிந்தராவ் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தங்க மோதிரங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.